பல்லடம் விவசாயி வீட்டில் திருட முயன்ற முகமூடி திருடன் - சிசிடிவி காட்சி வெளியீடு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ராயர்பாளையத்தில் விவசாயி வீட்டில் முகமூடி அணிந்த நபர் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ராயர்பாளையம் பகுதியில் விவசாயத் தோட்டம் ஒன்றில் முகமூடி அணிந்து உடல் முழுதும் போர்வையால் போர்த்திய நபர் அங்கு திருட முயற்சித்துள்ளார்.



இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதில், முகமூடி அணிந்தபடி திருடர்கள் கேமராவை துண்டித்துவிட்டு வீடுகளை நோட்டமிடுவது பதிவாகியுள்ளது.

ராயர்பாளையத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவரது விவசாய தோட்டத்தில் கடந்த 31.1. 2023 அன்று நள்ளிரவில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர், பல்லடம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.



சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் அந்த மர்ம நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். முகமூடி திருடர்கள் நடமாட்டத்தால் ராயர்பாளையம் பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...