நீலகிரி மாவட்டம் முதுமலையில் வன குற்றங்களை தடுப்பது குறித்து தமிழ்நாடு, கேரளா உட்பட 3 மாநில வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றற ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி கேரளா மாநிலம் முத்தங்கா வன சரணாலயம், கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் என 3 புலிகள் காப்பகங்கள் உள்ளன.

இந்த வனப்பகுதிகளில் வன குற்றங்களை தடுப்பதில் மூன்று மாநில வனத்துறையினர் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள வன மேலாண்மை பயிற்சி அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முதுமலை புலிகள் காப்பக கலை இயக்குனர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார்.

அதில், பந்திப்பூர் புலிகள் காப்பக கள இயக்குனர் ரமேஷ், கேரளா வனத்துறை அதிகாரி நரேந்திர பாபு, முத்தங்கா வன பாதுகாவலர் ஆசிப், முதுமலை துணை இயக்குனர் வித்யா, சத்தியமங்கலம் துணை இயக்குனர் கிருபா சங்கர் தேவேந்திர குமார் மீனா ஆகியோரும் அந்தந்த புலிகள் காப்பக வன சரகர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் வனப்பாதுகாப்பு மற்றும் தீத்தடுப்பு மேலாண்மை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், வனக்குற்றங்கள் தடுப்பதிலும் வன குற்றவாளிகளை பிடிப்பதிலும் தகவல் பரிமாற்றம் செய்வதிலும் அவசரகால சூழ்நிலைகளில் மாநில எல்லைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
குறிப்பாக நக்சல் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிப்பது உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்களும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.