'இரட்டை இலை சின்னம் முடங்க நான் காரணமல்ல..!' - ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக செந்தில் முருகன் போட்டியிடுவதாக அறிவித்த ஓ.பி.எஸ், பாஜக போட்டியிட்டால் வேட்பாளரை திரும்ப பெறுவதாகவும், தங்கள் வேட்பாளருக்கு சசிகலாவிடம் ஆதரவு கேட்க உள்ளதாகவும் தெரிவித்தார்.



சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் ஓ.பி.எஸ் தரப்பில் செந்தில் முருகன் போட்டியிட உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.



சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரோடு கிழக்கு சட்டமன்ற வேட்பாளராக செந்தில் முருகன் போட்டியிடுகிறார். அவர் அதிமுகவின் தீவிர விசுவாசி என்றார்.



ஓபிஎஸ் இபிஎஸ் என இரு தரப்பும் அதிமுக சார்பில் வேட்பாளர்களை அறிவித்தால் கட்சி சின்னமான இரட்டை இலை முடங்கக்கூடிய அபாயம் உள்ளது என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இதற்கு தான் காரணம் அல்ல என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவில் தனது ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் பதவிக்காலம் 2026 ஆம் ஆண்டு வரை உள்ளது.

இதுவரை கட்சியில் நடைபெற்ற பல்வேறு மட்ட தேர்தல்களில் இருவரும் சேர்ந்து கையெழுத்திட்டு தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி உள்ளோம்.

தேர்தலில் அதிமுக தரப்பில் வேட்பாளர்கள் போட்டியிட ஏ மற்றும் பி ஃபார்ம் ஆகியவற்றில் கையெழுத்திட நான் தயாராக இருக்கிறேன் என கட்சியின் மேலிடத்தில் தெரிவித்துள்ளேன்.

கட்சி சின்னம் முடங்குவதற்கு நான் எந்த வகையிலும் காரணம் இல்லை. அது உங்களுக்கே தெரியும். இரட்டை இலை சின்னம் கிடைக்காத பட்சத்தில் தனி சின்னத்துடன் போட்டியிடும் முடிவில் இருக்கிறேன்.

கூட்டணி கட்சி மற்றும் தேசிய கட்சியாக உள்ளதன் காரணமாக பாஜகவிடம் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன் ஆதரவு கேட்கப்பட்டது. பாஜக தரப்பில் வேட்பாளரை அறிவித்தால் தங்களது வேட்பாளர்களை திரும்பப் பெற தயாராக உள்ளோம்.



தங்களது தரப்பு வேட்பாளர் திடகாத்திரமாகவும் பலமான வேட்பாளராக இருக்கிறார். கட்சி சின்னம் முடங்குவதற்கு தான் எந்த நிலையிலும் காரணமாக இருக்க மாட்டேன்.

உள்ளாட்சி மற்றும் தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் கட்சி தலைவர்கள் ஒற்றுமையுடன் செயல்படாத நிலைக்கு நான் காரணம் இல்லை.

மத்திய அரசு இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டை வரவேற்கிறேன். எனது தரப்பு வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு சசிகலாவை சந்திக்க உள்ளேன் என்றார். அப்போது சசிகலாவை பிரச்சாரத்திற்கு அழைப்பீர்களா என செய்தியாளர்களின் கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள் என பதிலளித்தார்.

மெரினா கடற்கரையில் கலைஞருக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பான செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இந்த கருத்தை உள்நோக்கி பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

மக்கள் கருத்தே எனது கருத்து. தற்போது ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய ஒரு கட்சி அக்கட்சியின் தலைவருக்கு நினைவு சின்னத்தை அமைக்கிறது. இது தவறு அல்ல. மறைந்த திமுக தலைவர் கலைஞரை எனக்கும் பிடிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...