கோவை வால்பாறை அருகே வனத்துறை வாகனத்தை உடைத்த காட்டு யானைகள்!

வால்பாறை அருகே குடியிருப்பு பகுதிகளில் நுழைந்த காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்ற போது, வனத்துறையின் வாகனத்தை காட்டு யானை ஒன்று உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே வனச்சரக வாகனத்தை காட்டு யானைகள் தாக்கி சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் மானாம்பள்ளி வனச்சரகம் மற்றும் வால்பாறை வனச்சரகம் ஆகிய 2 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வன சரகத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறையினர் பணியாற்றி வருகின்றனர்.

மனிதர்களை வனவிலங்குகளிடம் இருந்து காப்பாற்ற இரவு பகலாக ரோந்து பணிகளில் ஈடுபட்டு வரும் வனத்துறையினர், காட்டு யானைகள், சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகளை விரட்டுவதற்காக வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.



இந்நிலையில் நேற்றிரவு வால்பாறை அருகேயுள்ள ஐயர்பாடி எஸ்டேட் பகுதியில் பதினைந்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதியில் நுழைந்துள்ளன. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் வாகனத்தின் மூலமாக காட்டு யானைகளை விரட்டினர்.



அப்போது கூட்டத்திலிருந்து வந்த ஒரு காட்டு யானை வனத்துறை வாகனத்தை வேகமாக முட்டியும், தந்தத்தால் குத்தியும் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியது. இதனிடையே வனத்துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இந்நிலையில், வனத்துறை வாகனத்தை காட்டு யானை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், காட்டு யானைகள் நடமாட்டத்தை கண்டறிந்து அவற்றை அடர்ந்த வன பகுதிக்குள் விரட்ட வனத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...