பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் பட்டை ஒட்டி வழியனுப்பி வைத்த திருப்பூர் ஆட்சியர்

பல்லடம் வழியாக பழனி முருகன் கோவிலுக்குப் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் பட்டை ஒட்டி வழியனுப்பி வைத்த திருப்பூர் மாவட்ட ஆட்சியர்.


திருப்பூர்: தைப்பூச விழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலுக்குப் பக்தர்கள் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள், பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குத் தைப்பூச விழாவை முன்னிட்டு, காவடி எடுத்துக்கொண்டு பாதயாத்திரையைத் தொடங்கியுள்ளனர்.

திருப்பூர், கோவை,பல்லடம் ஆகிய பகுதிகளிலிருந்து பக்தர்கள் முன்கூட்டியே பாதயாத்திரையைத் துவக்கி உள்ளனர்.



பல்லடம், குண்டடம்,தாராபுரம் வழியாக பழனிக்குப் பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவுப்படி போக்குவரத்துத்துறை சார்பில் இன்று பல்லடத்தில் பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் வினித் கலந்துகொண்டு இந்த முகாமினை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நிர்மலா தேவி மற்றும் ஈஸ்வரன், போக்குவரத்து காவலர்கள் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைவருக்கும் ஒளிரும் பட்டை ஒட்டுதல், தேநீர்,பிஸ்கட்,குடிநீர் பாட்டில்கள், ஒளிரும் கைத்தடிகள் ஆகியவை வழங்கி பக்தர்களை வழியனுப்பி வைத்தனர்.



மேலும் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் அனைவரும் நடைபாதை தனியாக இல்லாத இடங்களில் சாலையில் வலது புறம் வாகனங்கள் வரும் திசையில் பாதுகாப்பாகப் பயணிக்குமாறு, சாலையில் ஓரமாக நடந்து செல்லவும், இரவு நேரங்களில் ஒளிரும் பட்டைகள் பொருத்திச் செல்லவும், பனிமூட்ட நேரங்களில் பயணத்தைத் தவிர்க்கவும் பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...