'பாஜக தலைவர் அண்ணாமலையால் கட்சி பெண்களுக்கு பாதுகாப்பில்லை..!' - நடிகை காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டு

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் தனி தகவல் தொழில்நுட்ப பிரிவு தன்னைப்பற்றி தவறாக சித்தரித்து சமூக வளைத்தளத்தில் பரப்புவதாக நடிகை காயத்ரி ரகுராம் குற்றம்சாட்டு.


சென்னை: தனது புகைப்படத்தை சித்தரித்து வெளியிட்ட பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி நடிகை காயத்ரி ரகுராம் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ராணிப்பேட்டை மாவட்ட பாஜக நிர்வாகி பாபு என்பவர் தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிறகு பிரச்சினை குறித்து புகார் அளித்த பின்னர் அவரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டனர். பாஜக கட்சியில், தனக்கும் சில கட்சி பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதால் அறிந்து கொண்டு கட்சியிலிருந்து விலகினேன்.

தன் படத்தை தவறாக சித்தரித்து சமூக வளைத்தளத்தில் பரப்பப்பட்டு வருகிறது. இதற்கு அண்ணாமலையின் தனி தகவல் தொழில் நுட்ப பிரிவு தான் காரணம். அண்ணாமலை பாஜக மாநில தலைவராக பொறுப்பு ஏற்றதிலிருந்து பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையில் செயல்பாடுகள் தவறாக உள்ளது. தன்னை பற்றி கொச்சையாக பேசி வருகிறார்.

இவ்வாறு, காயத்ரி ரகுராம் தெரிவித்தார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...