வால்பாறை அருகே ஆற்றில் மூழ்கி தாய், மகன் உயிரிழப்பு

வால்பாறை அருகே ஆற்றில் துணி துவைக்க சென்ற தாய் மற்றும் மகன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: வால்பாறை அருகே ஆற்றில் துணி துவைக்க சென்றபோது தண்ணிரில் அடித்து செல்லப்பட்ட மகனை காப்பாற்ற சென்ற தாயும் நீரில் மூழ்கி இருவரும் பலியாகினர்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள சேடல் டேம் குடியிருப்பு பகுதியை சேர்ந்த தம்பதி சிவக்குமார்-முனிய செல்வி. இவர்களது மகன் சுஜித். சிவகுமார் ஓட்டுனராக வேலை செய்து வருகிறார்.

இன்று அவர் கேரளாவிற்கு வாகனம் ஓட்டுவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் மதியம் சுமார் ஒரு மணி அளவில் முனிய செல்வியும், மகன் சுஜித்தும் ஆற்றுக்கு துணி துவைக்க சென்று உள்ளனர்.

ஆற்றில் துணி துவைத்துக் கொண்டிருக்கும் பொழுது மகன் சுஜித் தண்ணீரில் விளையாடிய போது தண்ணீரில் விழுந்து உள்ளார். மகன் விழுந்ததை பார்த்த முனிய செல்வி மகனை காப்பாற்றுவதற்காக இறங்கி உள்ளார்.

அப்போது இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.



சிறிது நேரம் பின்பு ஆற்றின் கரையோரம் துணி துவைக்கப்பட்டு உள்ளதை பார்த்த தோட்டத்தில் வேலை செய்தவர்கள், தண்ணீரில் இருவரும் உடல் மிதந்து கொண்டிருப்பதை பார்த்த அதிர்ச்சி அடைந்தனர்.



தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடல்களை கைப்பற்றி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆற்றிற்கு துணி துவைக்க சென்று தண்ணீரில் மூழ்கி தாயும், மகனும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...