கோவை தடாகத்தில் கஞ்சா விற்ற 4 பேர் கைது - 7 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை பெரிய தடாகம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் உட்பட 4 பேர் கைது.



கோவை: தடாகம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 4 பேரிடம் இருந்து 7 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப்பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

அதன் அடிப்படையில் இன்று பெரியதடாகம் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக தடாகம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமான பெரியதடாகம் பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டபோது விற்பனைக்காக கஞ்சாவை வைத்திருந்தது தெரியவந்தது.



கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த யோகேஷ்குமார், ரூபன் பிரசிதன், ஹதீஸ் சாபிர் மற்றும் சிறுவன் உட்பட 4 நபர்களை தடாகம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...