கோவை துடியலூரில் புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது

கோவை துடியலூர் அருகே வெள்ளக்கிணர், கதிர்நாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 4 பேரை கைது செய்த போலீசார்.


கோவை: துடியலூர் அருகே கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கூல் லிப் போதைப் பொருட்களை சிலர் பெட்டிக்கடைகளில் வைத்து விற்பனை செய்து வருவதாக துடியலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதைத் தொடர்ந்து வெள்ளக்கிணர், கதிர்நாயக்கன்பாளையம், இடையர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பெட்டிக்கடைகளில் துடியலூர் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய கூல் லிப் உள்ளிட்ட போதை பொருட்களை பெட்டிக்கடைகளில் விற்பனை செய்ததை உறுதி செய்தனர்.

இதுதொடர்பாக ரவீந்திரன், அசோக் குமார், ஜெயக்குமார், தன்ராஜ் என 4 பெட்டிக்கடை உரிமையாளர்களை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 22 கூல் லிப் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, அவர்களை காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...