அன்னூர் அருகே குப்பத்தொட்டியில் பச்சிளம் குழந்தை மீட்பு

கோவை மாவட்டம், அன்னூர் அருகே பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று தொப்புள் கொடி கூட அகற்றப்படாத நிலையில் குப்பை தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு.



கோவை: அன்னூர் அருகே சாணம்பாளையம் பகுதியில் பிறந்து இரண்டு நாட்களே ஆன குழந்தை சாலையோர குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சாணம்பாளையம், கட்டபொம்மன் நகரில் இன்று தூய்மை பணியாளர்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தபோது சாலையோரம் குப்பை தொட்டிக்கு அருகே கட்டைப்பை ஒன்றில் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது.

சந்தேகமடைந்த பணியாளர்கள் கட்டைப் பையை திறந்து பார்த்தபோது அதில், பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று தொப்புள் கொடி கூட அகற்றாத நிலையில் இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பணியாளர்கள், குழந்தையை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



அன்னூர் அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சுற்று வட்டாரத்தில் அரசு மகப்பேறு சிகிச்சை மையங்களில், 2 நாட்களுக்கு முன் பிறந்த குழந்தைகளின் பட்டியலை அன்னூர் போலீசார் சேகரித்து வருகின்றனர்.

மேலும் முறை தவறி பிறந்ததால் குழந்தை சாலையில் வீசப்பட்டதா?, பெண் குழந்தை என்பதால் வீசிச் சென்றார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சாலையோரம் தொப்புள் கொடி கூட அகற்றப்படாமல் குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...