கிணத்துக்கடவு அருகே சாலை விபத்தில் கூலித்தொழிலாளி பலி!

கிணத்துக்கடவு அருகே எஸ்.மேட்டுப்பாளையம் பிரிவில் பொள்ளாச்சியிலிருந்து கோவை நோக்கி வந்த கார் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு.



கோவை: எஸ்.மேட்டுப்பாளையம் பிரிவில் நடந்த சாலை விபத்தில் கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முனீஸ்வரன்-முத்துலட்சுமி தம்பதி. இவர்கள் கிணத்துக்கடவு அருகே உள்ள எஸ்.மேட்டுப்பாளையம் பிரிவில் குடியிருந்து கூலி வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு எஸ். மேட்டுப்பாளையம் பிரிவில் கணவன், மனைவி இருவரும் சாலையோரம் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.



அப்போது பொள்ளாச்சியிலிருந்து கோவை நோக்கி வந்த கார் முனீஸ்வரன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...