டைமண்ட் தொழிற்சாலை மீது நடவடிக்கை தேவை! - கோவை மாவட்ட ஆட்சியரிடம் பாமகவினர் மனு

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் டைமண்ட் தொழிற்சாலையில் தொழிலாளர் உயிரிழப்பு விவகாரத்தில் அந்தத் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமகவினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை: கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் வைரங்களுக்கு பட்டை தீட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றும்தி செய்யும் "டைமாக்‌ஷன்" என்ற வைர தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதில், சுமார் 1800 பேர் பணிபுரிந்து வரும் நிலையில் கடந்த ஆண்டு ஜூன் 11ம் தேதியன்று தொழிற்சாலையில் பணிபுரிந்த கோகுல்ராஜ் (வயது43) என்ற தொழிலாளிக்கு தோல்பட்டையில் வலி மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் முதலுதவி பெட்டி வைக்கப்படாததாலும், முறையான முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்காததாலும் கோகுல்ராஜ் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், அவரது உயிரிழப்பால் அதிர்ச்சியடைந்த அவரது மாமா மற்றும் அவரது உறவினர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.



இந்நிலையில் தொழிலாளர் நல சட்ட விதிகளை முறையாக பின்பற்றாத தொழிற்சாலையை கண்டித்தும், அடிப்படை மருத்துவ உபகரணங்கள்கூட வழங்காத தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது மாவட்ட நிர்வாகமும், தொழிலாளர் நலத்துறையும் நடவடிக்கை எடுக்கக்கோரி, கோவை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



இது குறித்துப் பேசிய கோவை பாட்டாளி மக்கள் கட்சி கிழக்கு மாவட்ட தலைவர் கோவை ராஜ், கோகுல்ராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

அப்போது, கோவை பாட்டாளி மக்கள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் கோவை ராஜ், இளைஞரணி, மகளிரிணி என அனைத்து நிலை பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...