வீட்டுமனை பட்டா வழங்குக..! - கோவையில் வாயில் கருப்பு துணி கட்டி வந்து பொதுமக்கள் மனு!

வீட்டுமனை பட்டா வேண்டி அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவையை சேர்ந்தவர்கள், பொதுமக்களுடன் வாயில் கருப்பு துணியை அணிந்து வந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: வீட்டுமனை பட்டா வழங்ககோரி வாயில் கருப்புத்துணி கட்டியபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.



இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:

கோவை தடாகம் ரோடு, வேலாண்டிபாளையம், வெங்கடாபுரம், சிவாஜி காலனி, பெரியநாயக்கன்பாளையம் போன்ற பகுதிகளில் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் வீடு இல்லாமல் வாடகை வீட்டிலும், புறம்போக்கு இடத்திலும் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் செல்வபுரத்தில் உள்ள குடிசை மாற்று அலுவலகத்தில் வீடு கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் பல மாதங்களாகியும் அவர்களுக்கு இதுவரை வீடு ஒதுக்கீடு செய்யவில்லை.



இதேபோன்று சில வருடங்களுக்கு முன்பு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு சுமார் 60 பேர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தோம். இந்த நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சிலருக்கு பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை பட்டா வழங்கப்பட்ட இடத்தை அளந்து தராமல் அதிகாரிகள் இருந்து வருகின்றனர். இன்னும் சிலருக்கு பட்டா வழங்கவில்லை.

எனவே ஆட்சியர் இதில் தலையிட்டு வீடு இல்லாதவர்களுக்கு வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...