கோவையில் ரூ.25 லட்சம் மதிப்பிலான நகைகளுடன் மாயமான வடமாநில ஊழியருக்கு போலீஸ் வலைவீச்சு

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பட்டறையில் பணியாற்றி வந்த வடமாநில இளைஞர் ஒருவர் சுமார் 621 கிராம் எடையுள்ள தங்க நகைகளுடன் மாயமான நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர் பியூஸ். இவருக்கு அதேபகுதியில் தங்க நகை பட்டறை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பட்டறையில் தங்க நகைகள் ஆர்டர் கொடுத்தால் டிசைன் டிசைனாக ஆபரணங்களை வடிவமைத்து தந்து வருகின்றனர்.

இந்நிலையில், பியூஸ் நடத்தி வரும், தங்க நகை பட்டறையில் மேற்குவங்கம் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். அதேபோல், மேற்கு வங்கத்தை சேர்ந்த சதாம் உசைன் என்பவரும் அந்த பட்டறையில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்த சதாம் உசைன் பட்டறையில் செய்யப்பட்ட தங்க நகைகளை வேறு கடைக்கு எடுத்து சென்று ஃபினிஸிங் செய்த பின் நகைகளை பெற்று பட்டறையில் ஒப்படைப்பதே அவரது வேலையாக இருந்துள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு, பட்டறையில் இருந்து எடுத்து சென்ற நகைகளை ஃபினிஷிங் செய்யும் இடத்தில் கொடுத்துவிட்டு வாங்கிச் சென்ற அவர், மீண்டும் பட்டறை உரிமையாளரிடம் ஒப்படைக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்ற போது அவரது போன் சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. இதனையடுத்து சதாம் உசைன் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தபோது ஆள் இல்லை அவரது பை மட்டும் இருந்துள்ளது.

நண்பர்களிடம் விசாரித்த போது, சதாம் உசைன் தங்குகின்ற அறைக்கு வரவே இல்லை என்பதும் தெரியவந்தது. இதனால், சந்தேகமடைந்த பட்டறை உரிமையாளர் பியூஸ் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் சதாம் உசைன் 621.660 கிராம் எடையுள்ள தங்க நகைகளை திருடி சென்றதாக புகார் அளித்துள்ளார். மேலும் அவர் எடுத்து சென்ற தங்க நகைகளின் மதிப்பு ரூ.24.86 லட்சம் எனவும் தெரிவித்துள்ளார்.

தங்க நகை பட்டறையின் முன்னாள் ஊழியர் ஒருவரின் தவறான வழி காட்டுதலின் அடிப்படையில் நம்பிக்கையை ஏற்படுத்த நல்லவனாக நடித்து தங்க நகைகளை திருடிக்கொண்டு ஓட்டம் பிடித்தது போலிஸ் விசாரணையில் தெரியவந்தது.

தங்க நகை பட்டறையில் பணியாற்றும் வட மாநில வாலிபர்கள் தங்க நகைகளை திருடிக்கொண்டு ஓடும் சம்பவங்கள் கோவையில் தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...