உடுமலையில் காட்டுயானைகள் நடமாட்டம் - வனத்துறை தீவிர கண்காணிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மலை அடிவார பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


உடுமலை: உடுமலை அருகே மலை அடிவாரப் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகின்றன.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே இயற்கைஎழில் நிறைந்த பாதுகாக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள், அரிய வகை தாவரங்கள் உள்ளன.

வனவிலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கிடைக்கிறது. ஆனாலும், கோடை காலம் மற்றும் அதன் தொடக்கத்தில் இருந்து வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடிக்கொண்டு மலையின் அடிவாரப் பகுதிக்கு வருவது அடிக்கடி நிகழ்ந்துவருகிறது.

அந்த வகையில், அடிவாரப் பகுதியில் யானைகள் நடமாட்டம் இருந்துவருகிறது. கடந்த சில நாட்களாக உடுமலை கல்லாபுரம் பகுதியில் அடிவார பகுதிக்கு திடீரென யானைகள் கூட்டமாக வந்து செல்கிறது.



அப்போது பயிரிடப்பட்டிருந்த வாழைகளை சேதப்படுத்தும் யானைக்கூட்டம், திரும்பவும் வனப்பகுதிக்குள் சென்றுவிடுகிறது. இது குறித்த தகவல் அறிந்த வனத்துறையினர், மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதியில் தீவிர ரோந்துப் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...