'ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் யார்..?' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில்

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து அதிமுகவின் ஆட்சி மன்ற குழு கூடி அறிவிக்கும். இந்த தேர்தல் ஜனநாயகத்திற்கும், பணநாயகத்திற்கும் இடையே நடக்கும் போட்டி - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.


சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக-வின் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் கூறியதாவது:



இரட்டை இலை சின்னம் எங்கள் தரப்புக்குத்தான் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். அ.தி.மு.க. ஆட்சிமன்ற குழு வேட்பாளரை அறிவிக்கும்.

எங்களுடைய கட்சியை பொறுத்தவரையில் கருத்துக்கள் அனைத்தையும் கேட்டு, விருப்பமனு பெற்று அதனடிப்படையில் யார் மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள், தொகுதியில் பரிச்சயமானவர்கள், கட்சிக்கும், எம்.ஜி.ஆருக்கும். ஜெயலலிதாவிற்கும் விசுவாசமானவர்களா? என்று ஆய்வு செய்து ஆட்சிமன்ற குழு முடிவு செய்யும். ஆட்சிமன்ற குழு அறிவிக்கும்.

தி.மு.க. மாதிரி சர்வாதிகார கட்சி கிடையாது. இது ஜமீன்தார் கட்சியோ, அரச கட்சியோ கிடையாது. 31ஆம் தேதி வரை நேரம் உள்ளது. எங்களைப் பொறுத்தவரை நட்பு உணர்வு, தோழமை உணர்வு, கூட்டணி தர்மத்தை கடைபிடிப்போம். அந்த அடிப்படையில் அனைவரையும் பார்த்துவிட்டோம். எங்கள் கூட்டணியில் உள்ளவர்கள் எங்களுக்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளனர்.

உதாரணத்திற்கு தேசிய கட்சிகள் மாநில அளவில் முடிவு செய்ய முடியாது. தேசிய அளவில் கேட்டுத்தான் முடிவு செய்வார்கள். மாநில கட்சிகள் உடனே கூறிவிடுவார்கள். நீங்கள் அதிகம் யோசிக்க வேண்டியதில்லை.

நீதிபதிகளின் தீர்ப்பு தெளிவாக உள்ளது. கட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் உள்ளது. ஏ மற்றும் பி பார்மில் கையெழுத்திடும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது.

இந்த தேர்தல் ஜனநாயகத்திற்கும், பணநாயகத்திற்கும் இடையே நடக்கும் போட்டி ஆகும். பணநாயகம் வென்றதா சரித்திரம் இல்லை. ஜனநாயகம்தான் வெல்லும். ஜனநாயக அடிப்படையில் வாக்காளர்கள் முழு அளவில் எங்களை ஆதரிப்பார்கள்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சட்டம் ஒழுங்கு சீரழிந்த மற்றும் மோசமான மாநிலமாக உள்ளது. அம்மாவின் ஆட்சியில்தான் மக்கள் அதிக நன்மைகள் பெற்றனர், என்றார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...