என்னை ஒழுக்கமாகவும், ஆரோக்கியமாகவும் மாற்றியவர் மனைவி லதா..! - நடிகர் ரஜினி உருக்கம்

கெட்ட சிநேகிதர்களால் கெட்ட பழக்கம் வைத்துக் கொண்டிருந்த என்னை ஒழுக்கமாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றியவர் என்னுடையை மனைவி லதா தான் என்று சென்னையில் நடந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக பேச்சு.



சென்னை: நடத்துனராக இருக்கும்போது தினமும் மது குடிப்பேன், சிகரெட் பிடிப்பேன், இரண்டு முறை மாமிசம் சாப்பிடுவேன். சைவப் பிரியர்களை பார்த்தால் அப்போது எனக்கு பாவமாக தெரியும் என்று நடிகர் ரஜினிகாந்த் நினைவு கூர்ந்தார்.



சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மஹாலில் நடிகர் ஒய்.ஜி மகேந்திரனின் "சாருகேசி" நாடகத்தை பார்வையிட்டு, விரைவில் அந்த நாடகம் திரைப்படம்மாக்கப்பட உள்ள அறிவிப்பையும் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். பின்னர் சாருகேசி நாடகத்தில் நடித்த கதாபாத்திரங்களை கௌரவித்தார்.



பின்னர் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:

கடந்த 47 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மயிலாப்பூரில் ரகசியம் பரம ரகசியம் நாடகம் பார்க்க சென்ற நான் அரை மணி நேரம் காத்திருந்தும் நாடகத்திற்குள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

ஆனால் காலம் ஒருவரை எங்கிருந்து எப்போது எங்கு கொண்டு போகும் என தெரியாது. அதை மகா காலம் என்று சொல்வார்கள். அவ்வாறு ஐம்பதாவது விழாவில் தலைமை விருந்தினராக வந்திருக்கிறேன் என்றால் எல்லாம் அந்த காலத்தின் விளையாட்டு.

ஜெயலலிதா, நாகேஷ், சோ, விசு போன்றவர்கள் YGP நாடகக் குழுவில் இருந்து வந்தவர்கள். பாதுகாப்பும் கண்ணியமும் மிக்க நாடக குழுவினராக திகழ்கிறார்கள். சிவாஜி கணேசன் தற்போது இந்த நாடகத்தை பார்த்திருந்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டு இருப்பார் என்பதை யூகிக்கவே முடியாது.

மேலும் இந்த நாடகத்தை படமாக எடுக்கும் போது நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகமே இல்லை. ஒய்.ஜி மகேந்திரனுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியாது. என் மனைவி லதாவை எனக்கு அறிமுகப்படுத்தியவர் ஒய்ஜிஎம் தான்.

இன்று நான் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணமே என் மனைவிதான்.கெட்ட சிநேகிதர்களால் கெட்ட பழக்கங்கள் வைத்துக் கொண்டவன் நான். நடத்துனராக இருந்தபோதே எவ்வளவு பாக்கெட் சிகரெட் அடித்தேன் என்றே தெரியாது. காலையிலேயே பாயா ஆப்பம் சிக்கன் 65 சாப்பிடுவேன்.

சிகரெட், மது மற்றும் அசைவ உணவு என மூன்றையும் சேர்த்து சாப்பிடுபவர்கள் 60 வயதுக்கு மேல் வாழ்ந்ததே கிடையாது. இப்படிப்பட்ட பழக்கம் கொண்ட என்னை அன்பால் மாற்றிவர் லதா. என்னை ஒழுக்கமாக மாற்றி இருக்கிறார்.

நடத்துனராக இருக்கும்போது தினமும் மது குடிப்பேன், சிகரெட் பிடிப்பேன், நாள்தோறும் இரண்டு முறை மாமிசம் சாப்பிடுவேன். சைவப் பிரியர்களை பார்த்தால் அப்போது எனக்கு பாவமாக தெரியும், என்றார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...