உடுமலையில் பட்டப்பகலில் இருசக்கர வாகனம் திருட்டு - 2 பேரை கைது செய்த போலீஸ்

உடுமலை அருகே உணவகம் முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை பட்டப்பகலில் திருடிச் சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்னதர். அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.


உடுமலை: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தையடுத்த கண்ணாடிப்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணபிரான் (வயது49). இவர் நேற்று முன்தினம் காலை தனது நண்பரை சந்திப்பதற்காக குமரலிங்கம் வந்துள்ளார்.

அப்போது, உடுமலை-பழனி சாலையில் உள்ள உணவகத்தின் முன்புறம் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு உள்ளே சாப்பிட சென்றுள்ளார். திரும்பிவந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளைக் காணவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த கண்ணபிரான், அக்கம்பக்கத்தில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் குமரலிங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். பட்டப்பகலில், ஆட்கள் நடமாட்டம் நிறைந்த முக்கிய சாலையில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து அக்கம்பக்கத்தில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களின் பதிவுகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மற்றும் ரோந்துப் பணியினை போலீசார் மேற்கொண்டனர். இந்த நிலையில் ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் 2 பேர் ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்திவைத்து, அதன் நம்பர் பிளேட்டில் உள்ள எண்களை சுரண்டிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

அவர்களைப் பிடித்து நடத்திய விசாரணையில் அது உணவகத்தின் முன் திருடப்பட்ட கண்ணபிரானின் மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது. மேலும், பிடிபட்ட இருவரும், குமரலிங்கம் இந்திரா வீதியைச் சேர்ந்த அருள்ராஜ் (வயது38) மற்றும் ஜாஹிர் உசேன் வீதியைச் சேர்ந்த பகவதி (வயது27) என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, இருசக்கர வாகனத்தை திருடிய 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த மோட்டார் சைக்கிளையும் மீட்டனர்.

பிடிப்பட்ட இரண்டு பேரும் கடைசி வரை திருடியதை ஒத்துக் கொள்ளாததோடு, 'அது எங்க வண்டி சார், கொடுங்க சார்.. நாங்க கிளம்பணும்' என்று கீறல் விழுந்த ரெக்கார்டு போல சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...