ஜடையம்பாளையம் புதூரில் போதைப் பொருளுக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு

ஜடையம்பாளையம் புதூரில் குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் போதைப் பொருளுக்கு எதிராக மக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.



கோவை: ஜடையம்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் குடியரசு தினத்தையொட்டி பல்வேறு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் ஜடையம்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜடையம்பாளையம் புதூரில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.



இக் கூட்டத்தில் போதைப் பொருளுக்கு எதிராக உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் ஜடையம்பாளையம் பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் போதைப் பொருள்கள் விற்கப்படாது என்றும், மீறி விற்பனை செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இளைஞர்கள் பொதுமக்கள் நலனில் ஜடையம்பாளையம் ஊராட்சி முழு பங்களிக்கும் என்றும், ஊராட்சி தலைவர் பழனிச்சாமி தலைமையில் ஊர் பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.



இதேபோன்று பெள்ளேப்பாளையம் பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தலைவர் சிவகுமார் தலைமையில் எச்ஐவி தொற்றுக்கு எதிராக உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...