தமிழக இளைஞர்களை வடமாநில தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் துரத்தித் துரத்தி தாக்கிய காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: அனுப்பர்பாளையத்தில் தமிழக இளைஞர்களை வடமாநில தொழிலாளர்கள் தாக்கும் வீடியோ இணையத்தில் வரலாகியுள்ளது.
திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகரில் கடந்த 14ஆம் தேதி பனியன் கம்பெனியில் பணியிலிருந்த வடமாநில தொழிலாளர்கள் டீ இடைவேளைக்கு மாலை வெளியே வந்துள்ளனர்.
அருகே இருந்த பெட்டிக் கடையில் சிகரெட் வாங்கி புகைத்துள்ளனர். அப்போது அங்கு மது போதையில், தமிழக இளைஞர்கள் 4 பேர் வந்துள்ளனர். வடமாநில இளைஞர் தன் மீது சிகரெட் புகையை ஊதியதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் வடமாநில தொழிலாளியை 4 பேரும் சேர்ந்து தாக்கி உள்ளனர்.
இதனைக் கண்ட வடமாநில தொழிலாளர்கள் 4 தமிழக இளைஞர்களையும் துரத்தித் துரத்தி அடித்துள்ளனர். அந்த வழியாக 15 வேலம்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டதை அறிந்த தமிழக இளைஞர்கள் தப்பி ஓடி உள்ளனர்.
அதே போல் வடமாநில தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பிச் சென்றுள்ளனர். யாரும் புகார் கொடுக்காத நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை. இந்நிலையில் தகராறு நடைபெற்றதை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து தற்போது வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.