மருதமலை வனப்பகுதி அருகே தீ விபத்து

கோவை மருதமலை வனப்பகுதி அருகே உள்ள குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் காட்டுத்தீப் பரவும் அபாயம்.


கோவை: சோமயம்பாளையம் ஊராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கில் மாலை நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

கோவை மருதமலை வனப்பகுதிக்கு அருகே உள்ள சோமயம்பாளையம் ஊராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் மாலை நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ மளமளவெனப் பரவி குப்பைக் கிடங்கு முழுவதும் பற்றி எரிந்து வருகிறது.

இதனால் அருகே உள்ள மருதமலை வனப்பகுதியிலும் காட்டு தீ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக யானைகளின் வலசை பாதைகளும் வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கும் இடத்தில் ஏற்பட்டுள்ள தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமென அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே அங்கு பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் அதனால் ஏற்படும் புகையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...