திருப்பூரில் குடியரசு தினவிழா கொண்டாட்டம் - ரூ.1.91 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திருப்பூரில் நடந்த குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் வினீத் தேசியக்கொடி ஏற்றி வைத்து 113 பயனாளிகளுக்கு, ரூ.1.91 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.



திருப்பூர்: மாவட்ட நிர்வாகம் சார்பில் 74வது குடியரசு தின விழா, திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

நாட்டின் 74வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.



திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி மைதானத்தில் குடியரசு தின விழா நடந்தது. இதில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினை கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றி வைத்து காவல்துறையினரின் அனைவருக்கும் மரியாதை ஏற்றுக் கொண்டார்.



பின்னர் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் தியாகிகளின் வாரிசுகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.



இதையடுத்து திருப்பூர் மாநகர போலீசில் சிறப்பாக பணியாற்றிய 71 போலீசாருக்கும் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 86 போலீசருக்கும் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.



இதையடுத்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல துறை, வருவாய்த்துறை, மாவட்ட முன்னோடி வங்கி, கூட்டுறவு நலச்சங்கங்கள், வேளாண்மை பொறியியல் துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் மொத்தம் 113 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 91 லட்சத்து 39 ஆயிரத்து 347 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு ஆட்சியர் வழங்கினார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...