தெப்பக்காடு யானைகள் முகாமில் குடியரசு தினம் - தேசிய கொடிக்கு வணக்கம் செலுத்திய யானைகள்!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் 74 வது குடியரசு தின விழாவில் வளர்ப்பு யானைகளும் கலந்து கொண்டு தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தின.



நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானை வளர்ப்பு முகாமில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் 28 வளர்ப்பு யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இந்த முகாமில் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று தேசிய கொடி ஏற்றபடும். அப்போது வளர்ப்பு யானைகளும் கலந்து கொண்டு வனத்துறை ஊழியர்களை போல மூவர்ண கொடிக்கு மரியாதை செலுத்தும்.



இந்த நிலையில் இன்று 74 வது குடியரசு தின விழா வளர்ப்பு யானைகள் முகாமில் கொண்டாடப்பட்டது.



அப்போது அம்முகுட்டி, சங்கர், பாமா, கிருஷ்ணா உள்ளிட்ட யானைகள் வரிசையாக நின்று தேசியக்கொடி ஏந்தி யானைகள் வரிசையாக அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டது.



பின்னர் வனசரகர்கள்,வனகாப்பாளர், வனவர், வேட்டை தடுப்பு காவலர்கள் அணிவகுத்து நின்று இணை இயக்குநர் வனத்துறையினரின் மரியாதையை ஏற்றுக்கொண்டு தேசியக்கொடியை தேசியக் கொடியை ஏற்றினார். அப்போது அணிவகுத்து நின்ற யானைகள் பிளரியபடி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தின.



இந்த நிகழ்ச்சியில் வனத்துறையினர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து யானைகளுக்கு சிறப்பு உணவு அளிக்கப்பட்டது.இவ்வகழாவில் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தேசிய கொடிக்கு வளர்ப்பு யானைகள் மரியாதை செலுத்தியது அனைவரையும் வெகுவாக கவர்ந்து இருந்தது.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...