கோவையில் தினமும் 100 கிலோ தங்க நகைகள் வணிகம் நடக்கிறது! - நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் தகவல்

'தை' மாதம் பிறந்துள்ளதால் சுபமுகூர்த்தம் உள்ளிட்ட பல விஷேங்களுக்காக தங்க நகை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதாகவும், தினமும் 100 கிலோ எடையிலான தங்க நகை வணிகம் நடப்பதாகவும் தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: தொழில் நகரான கோவை தங்க நகை தயாரிப்பில் உலகளவில் சிறந்து விளங்குகிறது. முதலீடு செய்து வர்த்தகம் செய்பவர்கள் 3 ஆயிரம் பேர், உதிரிபாகங்கள் தயாரிப்பவர்கள் 10 ஆயிரம் பேர், தங்கத்தை வாங்கி நகை செய்து தரும் பட்டறை தொழிலில் 45 ஆயிரம் பேர் உள்ளனர்.

கோவை மாவட்டத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் இத்தொழிலில் ஒரு லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.



தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மார்கழி மாதத்தில் சுபகாரியங்கள் நடக்காத காரணத்தால் கோவையில் தங்க நகை தொழில் மிகவும் நலிவடைந்து காணப்பட்டது.



தை மாதம் பிறந்துள்ள நிலையில் திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுபகாரியங்கள் நடக்க தொடங்கியுள்ளதாக தங்க நகைகளை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.



கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராம் கூறியதாவது:

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையிலும் தை மாதம் பிறந்துள்ளதால் சுபகாரியங்கள் அதிகம் நடக்க தொடங்கியுள்ளன.

விலை அதிகரித்துள்ள போதும் மக்கள் தங்க நகை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். வழக்கமாக கோவையில் வழக்கமாக கோவையில் தினமும் 200 கிலோ எடையிலான தங்க நகை வணிகம் நடப்பது வழக்கம்.

தற்போது 50 சதவீதம் அதாவது 100 கிலோ எடையிலான தங்க நகைகள் வணிகம் தினமும் நடக்கிறது. மார்ச் 15-ம் தேதி வரை தொடர்ந்து தங்க நகை விற்பனை சிறப்பாக இருக்கும். எதிர்வரும் நாட்களில் தங்கத்தின் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் மிகவும் மந்தமாக இருந்த தொழில் தை மாதத்திலிருந்து மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வாய்ப்பாக அமைந்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...