கோவையில் குடியரசு தின கொண்டாட்டம் - அதிகாரிகளுக்கு நன்சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்!

கோவை உஉசி மைதானத்தில் 74வது குடியரசு தினம் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும், சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகளுக்கு பதக்கங்கள், நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.



கோவை: கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தேசிய கொடியை ஏற்றினார். அதனை தொடர்ந்து நடந்த காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஆட்சியர் ஏற்றுக்கொண்டார்.



பின்னர் காவல் துறை உள்ளிட்ட அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களை ஆட்சியர் சமீரன் வழங்கினார். அதன்படி முதலமைச்சர் காவலர் பதக்கமானது மாநகர காவல் துறையினர் 69 பேருக்கும், மாவட்ட காவல் துறையினர் 43 பேருக்கும் வழங்கப்பட்டன.



மேலும், சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினர்களுக்கான நற்சான்றிதழ், மாநகர காவலர்கள் 61 பேருக்கும், மாவட்ட காவலர்கள் 66 பேருக்கும் வழங்கப்பட்டன.



சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்களுக்கான நற்சான்றிதழ் 136 பேருக்கும் வழங்கப்பட்டன.



இதனை தொடர்ந்து பள்ளி கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



விழாவில், கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல காவல்துறை ஐஜி சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும், குடியரசு தினத்தினை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் திருவுருவ சிலைகளுக்கு அந்தந்த வட்டாட்சியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

குடியரசு தின நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காக, கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த தேசபற்றாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் வ உ சி மைதானம் வந்திருந்தனர்.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...