ஊட்டியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

ஊட்டியில் தேசிய வாக்காளர் தினத்தில் விழிப்புணர்வு பேரணி மற்றும் வாக்காளர் தினம் கொண்டாட்டம்.


நீலகிரி: ஊட்டியில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடபட்டு வருகிறது. அதன் படி நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பாக உதகையில் இன்று 13ஆவது தேசிய வாக்காளர் தினம் கொண்டாடபட்டது.



இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக உதகை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பள்ளி மாணவர்கள் மற்றும் மகளீர் சுய உதவி குழுவினர் என 500-க்கும் மேற்பட்டோர் பேரணியாக தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையம் வரை சென்றனர்.



பின்னர் அங்கு நடைபெற்ற தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அம்ரித், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் பிரபாகர் ஆகியோர் மாவட்டத்தின் மிக மூத்த வாக்காளர்களாக இருந்து வரும் 90வயதுக்கும் மேலான தோடர், இருளர், பனியர் பழங்குடியின தம்பதியினருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



பின்னர் வாக்காளர் தினம் குறித்து நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கபட்டன.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...