தாராபுரத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி - துணை ஆட்சியர் பங்கேற்பு

தாராபுரத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியைக் கொடியசைத்துத் துவக்கி வைத்த மாவட்ட துணை ஆட்சியர் பல்லவி வர்மா.



திருப்பூர்: தாராபுரத்தில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி தாராபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகே துவங்கியது.

தாராபுரம் வருவாய்க் கோட்டாட்சியர் குமரேசன் முன்னிலையில் திருப்பூர் மாவட்ட உதவி ஆட்சியர் பல்லவி வர்மா பேரணியைக் கொடியைச் சேர்த்துத் துவக்கி வைத்தார்.



தாராபுரம் மகாராணி கலை அறிவியல் கல்லூரியைச் சார்ந்த மாணவிகள் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு குறித்து எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு, பொள்ளாச்சி சாலை, அமராவதி சிலை வளாகம் வழியாகக் கோட்டாட்சியர் அலுவலகத்தை அடைந்து பேரணியை நிறைவு செய்தனர்.



அங்கு வாக்காளர் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.



இதில் கல்லூரி மாணவிகள் பொதுமக்களைக் கவரும் விதத்தில், உங்கள் ஓட்டு உங்கள் கையில், வாக்களிப்பது அவரவர் கடமை, உள்ளிட்ட வாசகங்கள் முகம் மற்றும் கைகளில் வரைந்து வித்தியாசமான முறையில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வைப் பொதுமக்களுக்கு ஏற்படுத்தினர். இதில் ஏராளமான கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...