கோவை மாவட்ட ஆட்சியரகத்தில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் தின உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் அனைத்து அரசுத் துறை அலுவலர்கள் ஏற்பு.


கோவை: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்குப் பரிசுகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் வழங்கினார்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சியரக அரசு அலுவலர்கள், பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் என அனைவரும் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் வாக்காளர் உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.



மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வாக்காளர் தினத்தினையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ மாணவர்களிடையே நடத்தப்பட்ட பாட்டுப்போட்டி, சுவர் ஓவியப்போட்டி என பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்குப் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் மேலும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களையும், சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் தேர்வு தரவு உள்ளீட்டாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...