'இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை மக்கள் புறக்கணிப்பார்கள்..!' - தனியரசு

சின்னம்மா, டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ் ஆகியோரை தவிர்த்து விட்டு,எடப்பாடி பழனிச்சாமி களத்திற்கு வந்தால் மக்கள் அவரை புறக்கணிப்பார்கள். அதிமுகவின் பாரம்பரிய வாக்குகள் கூட கிடைக்காது என்று கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு ஆதங்கம்.


சென்னை: எடப்பாடி பழனிச்சாமியின் எதேச்சையதிகாரப் போக்கைத் தேர்தலில் மக்கள் எதிர்ப்பார்கள் என கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு தெரிவித்துள்ளார்.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஓ.பி.எஸ் இல்லத்தில், கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் உ.தனியரசு சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்பு மொழிப்போர் தியாகிகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரால் வலிமையாகக் கட்டமைக்கப்பட்ட இயக்கம் அதிமுக. இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்துப் பேச ஓபிஎஸ் அழைப்பு விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து இங்கு வந்து ஆலோசனை நடத்தினேன்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக அணி வாக்குகள் சிதறாமல் வலிமையாக இருக்கின்றது. ஆனால் அதிமுகவில் ஒற்றுமை இல்லாமல் தடுமாற்ற நிலையில் இருக்கிறது. கொங்கு இளைஞர் பேரவை சார்பில் ஓ. பன்னீர் செல்வம் முயற்சிக்குப் பாராட்டு தெரிவித்தேன்.

பொதுவாக அ.தி.மு.க கொஞ்சம் தேர்தலில் தடுமாற்றத்தோடு இருப்பதாகத் தெரிகிறது. கட்சியை வலுப்படுத்தி வெற்றிக்காகப் பாடுபடுவதில் தோழமைக் கட்சிகளைச் சந்திப்பதையும் பார்த்து வருகிறோம்.ஓபிஎஸ் இல்லாவிடில் அதிமுக-வின் ஒன்றைரை கோடி தொண்டர்கள் தனியாக எடப்பாடியை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அவரின் எதேச்சதிகார போக்கைத் தேர்தலில் மக்கள் எதிர்ப்பார்கள். சின்னம்மா, டி.டி.வி. தினகரன் ஓ.பி.எஸ் ஆகியோரை தவிர்த்து விட்டு,எடப்பாடி பழனிச்சாமி களத்திற்கு வந்தால் மக்கள் அவரை புறக்கணிப்பார்கள் என்றார் அதிமுகவின் பாரம்பரிய வாக்குகள் கூட கிடைக்காது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ், ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பாகப் போட்டியிடுவதற்கு உங்களிடம் கூறிய பின்பு தான் வேட்பு மனு வாங்குவோம். உங்களிடம் கூறிய பின்பு தான் வேட்பாளரை அறிவிப்போம். சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு எங்களோடு இணக்கமாக உள்ள கட்சித் தலைவர்களை நாங்களும் சந்தித்து வருகிறோம், அவர்களும் எங்களைச் சந்தித்து வருகிறார்கள், என்றார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...