எக்ஸ்பிரஸ் கார்கோ சேவை - தமிழ்நாட்டில் முதல் முறையாக கோவை ரயில் நிலையத்தில் தொடக்கம்!

தமிழ் நாட்டில் முதல் முறையாக கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே மற்றும் தபால் துறை இணைந்து வழங்கும் 'எக்ஸ்பிரஸ் கார்கோ சேவை' இன்று முதல் தொடக்கம்.



கோவை: இந்திய ரயில்வே மற்றும் இந்திய தபால் துறை ஆகிய மத்திய அரசின் துறைகள் இணைந்து 'எக்ஸ்பிரஸ் கார்கோ சேவை' எனும் பார்சல் சேவையினை பல்வேறு மாநிலங்களில் வழங்கி வருகிறது.



இந்த நிலையில் தமிழ்நாட்டில் முதன் முறையாக எக்ஸ்பிரஸ் கார்கோ சேவை கோவை ரயில் நிலையத்தில் இன்று தொடங்கப்பட்டது.



முதற்கட்டமாக 480 கிலோ எடை அளவிலான பார்சல்கள், கோவையிலிருந்து சென்னைக்கு 'சதாப்தி எக்ஸ்பிரஸ்' ரயிலில் அனுப்பப்பட்டன.



இந்த சேவையை கோவையில் இருந்து ரயில்வே சேலம் கோட்ட, அசிஸ்டன்ட் கமர்சியல் மேனேஜர் பாண்டுரங்கா மற்றும் தபால் துறை, ரயில்வே துறையைச் சேர்ந்த அதிகாரிகள் தொடங்கி வைத்தனர்.

'ஜாயிண்ட் பார்சல் ப்ராடக்ட்' எனப்படும் இத்திட்டத்தில் பார்சல்கள் புக் செய்யும் இடத்திலிருந்து தபால்துறை மூலம் பெறப்பட்டு, ரயில்வே மூலம் கொண்டு செல்லப்பட்டு, மீண்டும் தபால் துறையின் மூலம் உரிய இடத்திற்கு சென்று வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...