உடுமலையில் பல லட்சம் மதிப்புள்ள கரும்புகள் தேக்கம்

உடுமலையில் பொங்கல் பண்டிகையின் போது பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டததால் பல லட்சம் மதிப்புள்ள கரும்புகள் தேக்கம்.


திருப்பூர்: எடப்பாடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து உடுமலைக்குப் பொங்கலுக்கு வந்த கரும்புகள் விற்பனை ஆகாமல் தேக்கமடைந்தன.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொங்கல் பண்டிகைக்குக் கரும்பு விற்பனை மிகவும் மந்தமாகக் காணப்பட்டது. இதனால் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட கரும்புக்கட்டுகள் தேக்கம் அடைந்துள்ளன.

இதுகுறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, உடுமலைக்கு பெரும்பாலும் எடப்பாடியிலிருந்து அதிகளவு கரும்புகள் விற்பனைக்குக் கொண்டுவரப்படுகின்றன. ஆனால் தற்பொழுது பொங்கல் பண்டிகை காலத்தில் கரும்பு வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை.

கடந்த காலங்களில் பொங்கல் பண்டிகைக்கு மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே கரும்பு விற்பனை நடைபெறும். பண்டிகை முடிந்து இரண்டு தினங்களுக்குள் அனைத்து கரும்புகளும் விற்றுத் தீர்ந்து விடும். ஆனால் தற்பொழுது பண்டிகை முடிந்து 1 வாரத்திற்கு மேலாகியும், உடுமலை நகரம் முழுவதும் ஐந்தாயிரம் கரும்புக்கட்டுகள் விற்பனை இன்றி தேங்கி உள்ளது.

இதனால் ஒவ்வொரு வியாபாரிகளுக்கும் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மக்களிடையே பணப்புழக்கம் குறைவாக இருப்பதும், ரேஷன் கடைகளில் இலவசமாகக் கரும்பு வழங்கப்பட்டதும், விற்பனை சரிவுக்குக் காரணம் என்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...