'உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கான ஆலோசகர் விரைவில் நியமனம்'..! - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

சென்னையில் அடுத்த ஆண்டு ஜன.10, 11ம் தேதிகளில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கான ஆலோசகர் விரைவில் நியமிக்கப்படுவார் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.


சென்னை: சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி 10 மற்றும் 11ம் தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறவுள்ளது. இது குறித்துப் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்த மாநாட்டிற்கான ஆலோசகர் நியமிக்கப்படவுள்ளதாகவும், ஆலோசகர் தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.

மேலும் இந்த உலக முதலீட்டாளர் மாநாட்டை உரிய திட்டமிடலுடன் நடத்தவுள்ளதாகவும், துறைவாரியான திட்டங்கள் நிறைய இருப்பதாகவும் அப்போது அவர் கூறினார். இந்த உலக முதலீட்டாளர் மாநாடானது வெறும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் மட்டும் கையெழுத்திடும் நிகழ்வாக இருக்காது என்று கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு, 2030ம் ஆண்டுக்குள் தமிழகம் அடைய நிர்ணயித்துள்ள பொருளாதார இலக்கான ஒரு டிரில்லியனை அடையும் வகையில், கணிசமான முதலீடுகளை உறுதிப்படுத்தும் வகையில் அதிகப்படியான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இதில் கையெழுத்தாக விருப்பதாகவும் தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் இதுவே முதல் உலக முதலீட்டாளர் மாநாடு என்று குறிப்பிட்ட அமைச்சர், இதற்கு முன்பு 2015 மற்றும் 2019ம் ஆண்டுகளில் நடந்த மாநாடு அப்போதைய அதிமுக அரசால் நடத்தப்பட்டது என்றும் கூறினார். 2024 உலக முதலீட்டாளர் மாநாட்டைப் பொறுத்தவரை, தமிழக அரசானது சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் வளர்ந்துவரும் துறைகளில் அதிக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

பெரிய நிறுவனங்களின் முதலீட்டை நமது மாநிலத்திற்கு ஈர்த்துவரும்போது, இங்குள்ள சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அவற்றிற்கு உரிய ஆதரவை ஒரே நேரத்தில் வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அண்மையில் டாவோஸில் நடந்த உலக பொருளாதார அமைப்பின் ஆண்டுக் கூட்டம், 2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கான தளமாக அமைந்ததாகவும், புதிய முதலீட்டாளர்கள் பலரை அதில் சந்தித்ததாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

அந்த மாநாட்டில், கொரோனா பெருந்தொற்று காலத்திலும், தமிழகத்தில் தொழில் வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்ததாகவும், தொழில் நிறுவனங்கள் தடையின்றி செயல்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், தொழில்துறையில் உள்ள அனைவருக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படுவதை உறுதிசெய்தோம் என்பன போன்ற உதாரணங்களை மேற்கோள் காட்டி பேசப்பட்டதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

மேலும், இந்த சந்திப்பின்போது, IKEA வின் குழுமமான இன்கா (Innka)வின் துணைசெயலாக்க அதிகாரி மற்றும் தலைமை கணக்கு அதிகாரி ஜூவென்சியோ மாத்ஷு(Juvencio Maeztu) ஆகியோரை தமிழகக் குழு சந்தித்துது.

அப்போது, கோயம்புத்தூரில் IKEA வை விரிவாக்கம் செய்ய விரும்புவதாக அந்தக் குழு தெரிவித்ததாகவும், இது தொடர்பான ஆரம்ப கட்ட விவாதம் மட்டுமே நடைபெற்றதாகவும், விரைவில் இதுபற்றி விரிவாகப் பேசவுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடியில் உள்ள பர்னிச்சர் பார்க் குறித்தும், அங்கு உருவாகி வரும் சுற்றுச்சூழல் குறித்தும் அவர்களிடம் பகிர்ந்துகொண்டதாகவும், கோவையில் IKEA விரிவாக்கம் குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையிலான குழுவினர், டாவோஸ் கூட்டத்தில் தங்கள் குழு நடத்திய சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள் குறித்து எடுத்துரைத்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...