'ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெறும்..!' - கோவையில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் பேட்டி

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் சிறுபான்மை மக்களின் ஆதரவோடு அதிமுக மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உஷேன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள திப்பு சுல்தான் காலத்தில் உருவாக்கப்பட்ட பழமையான பெள்ளாதி தர்காவில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைதேர்தலில் அதிமுக வெற்றி பெறவும், மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு விரைவில் அமைய வேண்டியும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.



அதிமுக அவை தலைவர் தமிழ் மகன் உஷேன் தலைமையில் அதிமுகவை சேர்ந்த சிறுபான்மை பிரிவினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே செல்வராஜ், பி.ஆர்.ஜி அருண்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு இந்த சிறப்பு தொழுகையை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மகன் உசேன், நடைபெற உள்ள ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சிறுபான்மை மக்களின் ஆதரவோடு மாபெரும் வெற்றி பெறும். திமுக அளித்த 525 வாக்குறுதி என்ன ஆனது? என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆளும் கட்சியின் பொய் வாக்குறுதியை நம்பி வாக்களித்த மக்கள், இன்று எப்போது இந்த ஆட்சி வீட்டிற்கு போகும், மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி எப்போது வரும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர், என்றார்.

டி.டி.வி தினகரன் குறித்த கேள்விக்கு பதில் அளித்த தமிழ்மகன் உசேன், அதிமுக கட்சியில் இருந்து புறக்கணிக்கப்பட்ட டி.டி.விக்கு அதிமுகவை பற்றியும் இரட்டை இலை பற்றியும் பேச எந்தத் தகுதியும் இல்லை எனவும், அதிமுக மீண்டும் புத்துயிர்பெற்று வருவதாகவும், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைதேர்தலில் அதன் முழு பலனும் எதிரொலிக்கும் என்றும் கூறினார்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...