கோவை மாநகராட்சி சார்பில் சிறந்த கவுன்சிலர்களுக்கு விருது

பொதுச்சேவையில் ஈடுபட்டு வரும் உறுப்பினர்களுக்குக் குடியரசு தினத்தன்று சிறந்த கவுன்சிலர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பு.


கோவை: கோவை மாநகராட்சி கவுன்சிலர்கள் பொதுமக்களுக்கு ஆற்றும் சேவைகளைப் பாராட்டும் விதத்திலும், ஊக்குவிக்கும் விதத்திலும், சிறந்த மாமன்ற உறுப்பினர் விருது வழங்கி மேயர் கல்பனா ஊக்குவிக்க உள்ளார்.

கோவை மாநகராட்சியில் 100 கவுன்சிலர்கள் உள்ளாட்சி பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். குடிநீர் விநியோகம், தடையில்லா மின்சாரம், பொதுவெளி தூய்மை, சாலை கட்டமைப்பு, கழிவு நீர் வடிகால், பூங்கா மேம்பாடு உள்ளிட்ட ஏராளமான பணிகளைச் செய்துவருகின்றனர். இது மட்டுமின்றி பல்வேறு நலப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு பொதுமக்களுக்கு ஆற்றும் சேவைகளைப் பாராட்டும் விதத்திலும், ஊக்குவிக்கும் விதத்திலும், சிறந்த கவுன்சிலர் உறுப்பினர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மாமன்ற கூட்டத்திற்கு வருகை புரிதல், ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குதல், பொது மக்களுடைய நன்மதிப்பு, வரி வசூலிப்பு பங்களிப்பு, மண்டல அளவில் அவர்களின் செயல்பாடு எனப் பல கட்ட வகையில் அளவுகோல்களைக் கொண்டு அதற்கு மொத்தம் 50 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டு மாமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அதன்படி கவுன்சிலர்கள் ஜி.வி. நவீன்குமார் (வார்டு 5), ஆ.ராதாகிருஷ்ணன் (வார்டு 18), செ.சரண்யா (வார்டு 30), எம்.கே.பிரவின்ராஜ (வார்டு 42), பிரபா ரவீந்திரன் (வார்டு 48), எ.அன்னக்கொடி (வார்டு 49) இலக்குமி இளஞ்செல்வி (வார்டு 52), கே.செல்வராஜ் (வார்டு 72), இ.அகமது கபீர் (வார்டு 86), ரா.கார்த்திகேயன் (வார்டு 100) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு வரும் குடியரசு தினத்தன்று மாநகராட்சி மேயர் கல்பனா விருதுகளை வழங்கி ஊக்குவிக்கவுள்ளார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...