'வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்களின் தொழில் உரிமம் பறிக்கப்படும்..!' - அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை

வணிக வரி மற்றும் பதிவுத்துறையில் கடந்த ஆண்டில் 1லட்சத்து 17 ஆயிரத்து 690 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது எனவும், அரசின் வரி வருவாயை உயர்த்தும் வகையில் ஜிஎஸ்டி வரம்புக்குள் அதிகமானோர் கொண்டுவரப்பட்டுள்ளனர் எனவும் அமைச்சர் மூர்த்தி தகவல்.


சென்னை: சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி வளாகத்தில், வணிகவரி இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.



பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் மூர்த்தி கூறியதாவது:



கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் கிடைத்த அளவு தமிழக அரசின் வரிவருவாய் முதலமைச்சர் நடவடிக்கையால் இந்த ஆண்டில் ஜனவரிக்குள் வரப்பெற்றுள்ளது. வணிக வரித்துறையில் 1லட்சத்து 459 கோடி வருவாய் , பதிவுத்துறை மூலம் 13 ஆயிரத்து 639 கோடி வருவாய் என இரு துறைகள் மூலம் 1 லட்சத்து 17 ஆயிரத்து 690 கோடி வருவாய் கடந்த ஆண்டில் ஈட்டப்பட்டுள்ளது.

ரூ.370 கோடியாக இருந்த வணிக வரி வருவாய் தற்போது ரூ.1,666 கோடியாக உயர்ந்துள்ளது. வரி வருவாயை உயர்த்தும் வகையில் ஜிஎஸ்டி வரம்பிற்குள் அதிகமானோர் கொண்டு வரப்பட்டுள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுக் காலத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் ஜிஎஸ்டி வரம்புக்குள் புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

புதிய தொழிற்சாலை, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் அரசின் வரி வருவாய் உயர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நிலுவையில் உள்ள வரிகளை அதிகாரிகள் மூலம் பெற்று வருகிறோம்.

இதுவரை 2 ஆயிரம் போலிப் பத்திரங்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலிப் பத்திரப்பதிவு தொடர்பாகப் புகார் மனு பெறப்பட்டால் 60 நாளுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.

வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரி ஏய்ப்பு தொடர்பாக 366 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படுகிறது , அவர்கள் மீண்டும் தொழில் செய்ய முடியாத சூழல் ஏற்படும்.

வாட்டாட்சியர் அலுவலகத்திலேயே பட்டா மாறுதல் செய்யும் நடைமுறை சோதனை அடிப்படையில் தற்போது மதுரை மாவட்டத்தில் மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் மூர்த்தி கூறினார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...