நாற்காலி எடுத்து வர தாமதமானதால் தொண்டர் மீது கல் வீசிய அமைச்சர் நாசர் - வைரலாகும் வீடியோ

திருவள்ளூர் அருகே ஆய்வுப் பணிக்குச் சென்றபோது நாற்காலி எடுத்து வரத் தாமதமானதால் டென்ஷனான அமைச்சர் நாசர், தொண்டர் மீது கல்லை தூக்கி எறியும் வீசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.



திருவள்ளூர் மாவட்டம் வேடங்கிநல்லூரில் திமுக சார்பில் நாளை மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

இதனை முன்னிட்டு விழா ஏற்பாடு பணிகளை ஆய்வு செய்த பால்வளத்துறை அமைச்சர் நாசர் நாற்காலிகளை எடுத்துவர கட்சித் தொண்டர்களிடம் கூறினார். கட்சி நிர்வாகிகள் அதிகமாக இருந்த நிலையில் ஒருசில நாற்காலிகள் மட்டுமே எடுத்து வரப்பட்டதோடு, தாமதமும் ஆனதால் தனது கோபத்தை வெளிப்படுத்தத் தொண்டர்கள் மீது கல்லை வீசினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

பொது இடத்தில் பால்வளத்துறையாக இருக்கும் அமைச்சர் நாசர் நடந்துக் கொண்ட விதம், சமூகவலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் நாசரை தாக்கி பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...