கோவை பீளமேடு அருகே சாலையில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் தகராறு - வீடியோ வைரல்

கோவை பீளமேடு அருகே இரண்டு தனியார் பேருந்து ஓட்டுநர்கள், சாலையில் பேருந்துகளை நிறுத்தி தகராறில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரல்.



கோவை: கோவை பீளமேடு அருகே இரண்டு தனியார் பேருந்து ஓட்டுநர்கள், போட்டிப் போட்டு பேருந்தை ஓட்டி வந்து சாலையில் நிறுத்தி தகராறில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கோவை மாநகரில் இயக்கப்படும் தனியார் பேருந்து ஓட்டுநர்களிடையே யார் முதலில் பேருந்தை இயக்குவது தொடர்பாக அடிக்கடி தகராறில் ஈடுபடுவதோடு, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில், பேருந்துகளை வேகமாக இயக்குவது போன்ற பிரச்னைகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

குறிப்பாக காந்திபுரம் பேருந்து நிலையம், டவுன்ஹால், உக்கடம் பேருந்து நிறுத்தங்களில் ஓட்டுநர்கள் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கிக் கொள்ளும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் கோவை உக்கடத்திலிருந்து சிங்காநல்லூர், பீளமேடு வழியாக காந்திபுரத்திற்கு இயக்கப்படும் ஶ்ரீகுமரன் தனியார் பேருந்து மற்றும் காந்திபுரத்திலிருந்து கணுவாய் செல்லும் சப்தகிரி தனியார் பேருந்தும் அவினாசி சாலையில் வந்த போது போட்டிப் போட்டு வேகமாக இயக்கியுள்ளனர்.



அப்போது பீளமேடு அருகே வந்த போது இரண்டு பேருந்து ஓட்டுநர்களும் பேருந்துகளை சாலையில் நிறுத்தி விட்டு, சாலையில் இறங்கி டைமிங் பிரச்சனை தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.



இதையடுத்து அங்கு வந்த மாநகர போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் டைமிங் பிரச்சனையால் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் சாலையில் பேருந்துகளை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...