தபெதிக பொதுச்செயலாளர் மனைவி மறைவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் நேரில் அஞ்சலி

தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் மனைவி மறைவுக்கு நேரில் சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார் விசிக தலைவர் தொல்.திருமாவளவன்.


கோவை: தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் மனைவி மறைவுக்கு நேரில் சென்று அவர்களது குடும்பத்தினருக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ஆறுதல் கூறினார்.

தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் மனைவி வசந்தி கடந்த வெள்ளிக்கிழமையன்று உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்தனர்.



இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், காந்திபுரம் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணன் இல்லத்திற்கு நேரில் சென்று அவர்களது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.



மேலும் மறைந்த வசந்தி அவரது புகைப்படத்திற்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.



இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை மாவட்ட நிர்வாகிகள் சுசி கலையரசன் உட்படப் பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...