உடுமலையில் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிர்ப்பு - தென்னைசார் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் வட மாநில தொழிலாளர்களை கண்டித்து தென்னை சார்ந்த தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான தென்னை சார்ந்த தொழிலாளர்கள் தேங்காய் உரிக்கும் பணி, தேங்காய் உடைத்தல், தேங்காய்களை வாகனத்தில் ஏற்றுதல், இறக்குதல் மற்றும் தேங்காய் களங்களில் தேங்காய் பருப்பு எடுத்து பக்குவப்படுத்தி நார் பிரித்தெடுக்கும் பணி, உள்ளிட்ட பிரதான பணிகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.



அண்மைக்காலமாக, வட மாநில தொழிலாளர்கள் அதிகளவில் குறைந்த சம்பளத்தில் இந்தப் பணிகளுக்கு அமர்த்தப்பட்டுவருவதால், தமிழக தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறைந்த கூலியை கொடுத்து, விவசாய முதலாளிகள் வட மாநில தொழிலாளர்களை அதிக அளவில் வேலைக்கு அமர்த்துவதால், தமிழ்நாட்டு தென்னை சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

எனவே, தமிழ்நாட்டு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் தென்னை தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு ஊதியம் நிர்ணயம், இ.எஸ்.ஐ.பிடித்தம், பணி பாதுகாப்பு ஓய்வூதிய மருத்துவ காப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.



தென்னை தொழிலாளர் நல வாரியம் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தென்னை சார் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணனை, போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டதொழிலாளர்கள் முற்றுகையிட்டு கோரிக்கை மனுவை அளித்தனர். தங்களது கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் உடுமலை பகுதி தென்னைசார் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...