போலி பாஸ்போர்ட்டில் பயணம் - கோவை ஏர்போர்ட்டில் வங்கதேச இளைஞர் கைது!

போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியா வந்த வங்கதேச இளைஞர், கோவை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம் பீளமேடு போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.


கோவை: சார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர்-அரேபியா விமானத்தில் வந்த பயணிகளை கண்காணிக்கும் பணியில் விமான நிலைய அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது, விமானத்தில் பயணம் செய்த இளைஞர் ஒருவரை அதிகாரிகள் அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், அந்த இளைஞர், தான் மேற்கு வங்கம் மாநிலத்தை சேர்ந்தவர் என கூறியுள்ளார். மேலும், அவர் வைத்திருந்த பாஸ்போர்ட்டிலும் மேற்கு வங்கம் மாநிலம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இருப்பினும் சந்தேகத்தின் பேரில், அவரை தேசிய கீதம் பாடுமாறு அதிகாரிகள் கேட்டுள்ளனர். அப்போது, அந்த இளைஞருக்கு தேசிய கீதம் தெரியவில்லை. இதையடுத்து, அவரிடம் மேற்கொண்ட தொடர் விசாரணையில், பிடிபட்ட நபர் வங்கதேசம் நாட்டை சேர்ந்த அன்வர் உசேன் (வயது28) என்பதும், போலி பாஸ்போர்ட் மூலம் கோவைக்கு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள், பீளமேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த பீளமேடு போலீசார் அன்வர் உசேனை கைது செய்து, அவர் மீது 14-c of foreigner act மற்றும் 12(1A)(a) passport act ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...