நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கவுண்டன்கொல்லி பகுதியில் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானையை விரைந்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையெனில் நாளை 25-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கவுண்டன் கொல்லி, பாடந்துறை போன்ற பகுதியில் ஒற்றை காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. அது குறித்து, வனத்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் வழங்கபட்ட போதும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
அதனையடுத்து, கூடலூர் வருவாய் கோட்டாட்சியரிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். மாவட்ட முதன்மை வன அலுவலகத்திற்கு சென்றபோது மாவட்ட வன அலுவலரிடம் மனு வழங்கியபோதும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

காட்டு யானை அட்டகாசம் தொடர்பாக, வனத்துறை உயர் அதிகாரிகள் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கூறியிருந்த நிலையில், காவல்துறை அதிகாரிகள் மற்றும் கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மக்களிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
அந்த பேச்சு வார்த்தையின்போது, விரைவில் ஒற்றை காட்டு யானையை விரைந்து பிடிக்க உத்தரவு வழங்க வேண்டும் எனவும், இல்லையென்றால் வருகின்ற 25ஆம் தேதி இப்பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் அனைவரும் திரண்டு தேவர் சோலை பேரூராட்சி முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
இதனையடுத்து, காட்டு யானையை பிடிப்பது குறித்து விரைவில் தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.