ஆன்லைனில் தவறாக அபராதம் விதிப்பு - நீலகிரி எஸ்.பியிடம் லாரி உரிமையாளர்கள் முறையீடு!

நீலகிரி மாவட்டத்தில் கன ரக வாகனங்களுக்கு ஆன்-லைன் மூலம் அபராதம் விதிப்பதை முறைப்படுத்தக்கோரி, நூற்றுக்குக் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.


நீலகிரி: மலை மாவட்டமான நீலகிரியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயங்குகின்றன. மலை காய்கறிகளை மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லவும், மாவட்டத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொண்டு வரவும் இந்த லாரிகள் பயன்படுத்தபட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஆன்லைன் அபராதம் விதிப்பு முறை அமலுக்கு வந்த பின்னர், சாலை ஓரத்தில் நிறுத்தப்படும் லாரிகள், எரிப்பொருள் நிரப்ப பெட்ரோல் பங்குகளுக்கு செல்லும் லாரிகளின் பதிவு எண்ணை காவல்துறையினர் எழுதி வைத்து கொண்டு அவற்றுக்கு தொடர்ந்து அபராதம் விதித்து வருவதாக கூறப்படுகிறது.



குறிப்பாக, வட மாநிலங்களுக்கு வாடகைக்கு சென்றுள்ள லாரிகள், ஊட்டியில் இருப்பது போன்று அபராதம் விதிப்பதாகவும், கனரக வாகன ஓட்டுனர்களுக்கு தலைகவசம் அணியவில்லை, சீட் பெல்ட் அணியவில்லை என்று அபராதம் விதிப்பதாகவும் அவ்வாறு விதிக்கப்படும் அபராதம் குறித்து கனரக வாகனங்களை தகுதி சான்றிதழ் பெற வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லும்போதுதான் தெரியவருவதாகவும் லாரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.



இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள லாரி உரிமையாளர்கள் சங்கத்தை சார்ந்த 100-க்கும் மேற்பட்டோர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அதில், ஆன்லைனில் அபராதம் விதிக்கும் முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும், விதிமீறும் கன ரக வாகனங்களை நேரடியாக நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்து அபராதம் விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...