நீலகிரி கூடலூர் அருகே காட்டுயானை தாக்கி முதியவர் பலி - பொதுமக்கள் போராட்டம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து, அவரிடன் உடலை எடுக்க விடாமல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகின்றன. பகல் நேரங்களிலேயே கிராமப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் காட்டுயானைகள் அவ்வப்போது மனிதர்களையும் தாக்கி வருகின்றன.

இந்த நிலையில், நேற்று மாலை ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட டெல்லோஸ் பகுதியைச் சேர்ந்த சிவனாண்டி (வயது65) என்ற முதியவர் வழக்கம்போல தனது வீட்டிற்கு விறகு சேகரிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது, வனப்பகுதியில் மறைந்திருந்த காட்டு யானை ஒன்று அவரை கடுமையாக தாக்கியது.



இதில், சம்பவ இடத்திலேயே முதியவர் சிவனாண்டி உயிரிழந்தார். இதனை அறிந்த வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்று முதியவர் உடலை மீட்க முயன்றனர். அப்போது, அங்கு கூடிய பொதுமக்கள், வனத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதிக்கு வந்த வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் மக்களிடம் சமரசப் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், யானை தாக்கி உயிரிழந்த முதியவரின் மகனுக்கு அரசு வேலை மற்றும் குடியிருப்பு பகுதிகளைச் சுற்றி சோலார் மின்வெலிகள் அமைக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து, முதியவரின் உடலை கூடலூர் அரசு பொது மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக காவல்துறையினர் அனுப்பிவைத்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...