திருப்பூர் கட்டிட தொழிலாளர் சங்க கிளை பேரவை கூட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே இந்திய தொழிற்சங்க சம்மேளன கட்டிட தொழிலாளர் சங்கத்தின் கிளைப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள ஆர்.வேலூர் ஊராட்சியில் இந்திய தொழிற்சங்க சம்மேளனம் கட்டிட தொழிலாளர் சங்கம் கிளை பேரவை கூட்டம் நடைபெற்றது.

மாநில செயற்குழு உறுப்பினரும் தொழிற்சங்க மாவட்ட செயலாளருமான குணசேகரன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.



அதில், கட்டுமான தொழிலாளர்களுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி, கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் குறைந்தது 5000 நிர்ணயம் செய்ய கோரிக்கை மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு அரசு வீடு கட்டும் திட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தப் பேரவைக் கூட்டத்தில், மகளிர் அணி பொறுப்பாளர் வைதேகி, தொழிற்சங்க நகர பொறுப்பாளர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டனர். மேலும், அனைவருக்கும் புதுப்பிக்கப்பட்ட நலவாரிய அட்டைகள் மற்றும் நடப்பாண்டிற்கான தினசரி நாட்காட்டியும் இந்தப் பேரவைக் கூட்டத்தில் இறுதியில் வழங்கப்பட்டது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...