சூலூரில் வீட்டுத் திண்ணையில் பொருட்கள் வைப்பதற்கு ஏற்பட்ட மோதலில் வடமாநில நபர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய மூவர் கைது.
கோவை:ரங்கநாதபுரம் பகுதியில் வாய்தகராறில் ஏற்பட்ட தாக்குதலில் வடமாநில வாலிபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணாம்பாளையாம் ரங்கநாதபுரம் பகுதியில் பீகாரைச் சேர்ந்த முன்னா ஷர்மா.
இவர் அதே பகுதியில் உள்ள சங்கர் என்பவருக்குச் சொந்தமான பில்டிங் ஒர்க் ஷாப்பில் வேலை செய்து கொண்டு சங்கருக்குச் சொந்தமான வீட்டில் குடியிருந்து வந்துள்ளார்.
அதே வீட்டுக்கு அருகில் சங்கர் வொர்க் ஷாப்பில் வேலை செய்யும் மற்றொரு நபரான காளிதாஸ் என்பவரும் அந்த வீட்டில் குடியிருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் முன்னா சர்மாவுக்கும்,காளிதாசுக்கும் இடையே அங்கிருக்கும் வீட்டுத் திண்ணையில் பொருட்கள் வைப்பதற்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.பொங்கல் தினத்தன்று அதேபோல வாக்குவாதம் இருவருக்கும் ஏற்பட்டு இருக்கிறது.பின்னர் சொந்த ஊருக்குச் சென்ற காளிதாஸ் சொந்த ஊரிலிருந்து இருவரை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது மீண்டும் பழைய பிரச்சனையை மனதில் வைத்துக் கொண்டு முன்னாவிடம் பிரச்னை செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் காளிதாஸ் மற்றும் அவரது நண்பர்கள் இருவரும் முன்னாள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதில் முன்னாவுக்கு தலை மற்றும் நெற்றியில் படுகாயம் ஏற்பட்டது.
இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் முன்னாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்தனர்.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக சூலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
சம்பவத்துக்குக் காரணமான காளிதாஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் தலைமறைவான நிலையில் காளிதாசை கைது செய்த காவல்துறையினர் அவரது நண்பர்களான புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல் ராகவேந்திரா சென்னை சேர்ந்த காளீஸ்வரன் ஆகியோரை கைது செய்து மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.