திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்றுவரும் அரசு கலைக்கல்லூரி புதிய கட்டிடப் பணிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள ஐடிஐ அரசு தொழில் பயிற்சி நிலையத்தின் அருகே அரசு கலைக்கல்லூரி புதிய கட்டிடத்தின் கட்டுமான பணிகள் கடந்த மாதம் தொடங்கப்பட்டது.

அரசு கலை கல்லூரி பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்தை தாராபுரம் சட்டமன்ற உறுப்பினரும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான கயல்விழி செல்வராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பேசிய அமைச்சர், திமுக தேர்தல் வாக்குறுதியின்போது தாராபுரத்தில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில், கடந்த மாதம் தாராபுரம் அரசு கலைக்கல்லூரி அடிக்கல்நாட்டு விழா நடைபெற்றது.

தற்போது, அரசு கலைக் கல்லூரி கட்டுமான பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என்பது குறித்து நேரில் ஆய்வு செய்தேன் என்றார்.