கோவை குறிச்சிகுளத்தில் கட்டிட தொழிலாளி சடலமாக மீட்பு - போலீசார் விசாரணை!

கோவை குறிச்சி குளத்தில் மர்மமான முறையில் இறந்த நிலையில், மிதந்த கட்டிட தொழிலாளி முரளி என்பவரின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை.


கோவை: கோவை, குறிச்சி குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.



இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டனர்.



இதனை தொடர்ந்து கைப்பற்றப்பட்ட சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் முரளி என்ற கட்டிட தொழிலாளி என்பது தெரியவந்தது. மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போத்தனூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...