கோவை அருகே வேலையில் குறைவான சம்பளம் கிடைத்ததால் மனமுடைந்த இளைஞர் மஞ்சள் சாயத்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை வெள்ளக்கிணர் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல் (வயது 27). ஒரு தனியார் நிறுவனத்தில் சர்வீஸ் அட்வைசராக அவர் வேலை செய்துவந்துள்ளார். அங்கு அவருக்கு சம்பளம் குறைவாக கிடைத்ததால், மனவருத்தத்தில் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
வேலைக்குச் செல்லாத விரக்தி மற்றும் மனஉளைச்சலில் இருந்துவந்த கோகுல், நேற்று வீட்டில் இருந்த மஞ்சள் சாயத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கோகுல் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த துடியலூர் போலீசார், கோகுல் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர்