தாராபுரத்தில் ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த நடத்துநர் - போலீசார் விசாரணை

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தனியார் பேருந்தின் வாசல் கதவு திடீரென்று திறந்து கொண்டதால் நிலைதடுமாறிய நடந்துநர் கீழே விழுந்து படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


திருப்பூர்: ஈரோட்டிலிருந்து பழனி செல்லும் ஒரு தனியார் பேருந்தில், நடந்துநராக ஈரோட்டை சேர்ந்த யுவராஜ் இருந்துவருகிறார். இந்த நிலையில், நேற்று ஈரோட்டில் இருந்து தாராபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்த பேருந்து, பயணிகளை ஏற்றிக்கொண்டு பெரிய கடைவீதி வழியாக புது போலீஸ் நிலைய வீதியில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, நடத்துநர் யுவராஜ் பேருந்தின் முன்பக்க படிக்கட்டில் நின்றிருந்தார்.

போலீஸ் நிலையம் அருகே வளைவில் பேருந்தை திருப்பிய போது திடீரென அதன் முன்பக்க கதவு திறந்து கொண்டது. இதனால், முன்பக்க படிக்கட்டில் நின்று கொண்டிருந்த யுவராஜ் நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் கூச்சலிட்டனர்.

உடனே பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் உள்ளிட்டோர், படுகாயம் அடைந்த நடத்துநர் யுவராஜை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு, மேல்சிகிச்சைக்காக திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு யுவராஜ் அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...