திருப்பூரில் வங்கிக் கணக்கில் பணம் கையாடல் புகார் - குடும்பத்துடன் ஓய்வுப்பெற்ற காவலர் போராட்டம்!

திருப்பூரில் வங்கி கணக்கில் இருந்து பணம் கையாடல் செய்யப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து ஓய்வுபெற்ற காவலர் குடும்பத்துடன் வங்கியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் சாமுண்டிபுரம், எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் கடந்த 1993ம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் பணியில் சேர்ந்துள்ளார். பணியில் சேர்ந்த நாளில் இருந்து கடந்த 2010ம் ஆண்டு வரையில் அரசுடமையாக்கப்பட்ட வங்கி மூலம் சம்பளம் பெற்றார். கடந்த 2010ம் ஆண்டு ரயில்வே போலீசில் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

அதிலிருந்து, அதிகாரிகளின் உத்தரவின் பேரில் திருப்பூர், ஊத்துக்குளி ரோட்டிலுள்ள ஆக்சிஸ் வங்கிக்கு சம்பள கணக்கை மாற்றம் செய்துள்ளார். சிவக்குமார் கடந்த 2020ம் ஆண்டு சிறப்பு எஸ்ஐயாக விருப்ப ஓய்வு பெறும் வரையிலும் தனியார் வங்கி கணக்கில் சம்பளம் பெற்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டு அந்த தனியார் வங்கியிலிருந்து சிவக்குமார் ரூ.3.50 லட்சம் வங்கி கடன் பெற்றார். அந்தக் கடனை, தவணை முறையில் மாதா மாதம் கட்டிவந்துள்ளார்.



இந்நிலையில், சிவக்குமார் விருப்ப ஓய்வு பெற்றபின் அரசுடமையாக்கப்பட்ட வங்கிக்கு ரூ.8.81 லட்சம் பணப்பலன்களை கருவூலத்திலிருந்து செலுத்தினர். மேலும், சில நாட்கள் கழித்து ரூ.9.50 லட்சம் பணபலன்களை சிவக்குமாரின் ஆக்ஸிஸ் வங்கி கணக்கிற்கு கருவூலத்திலிருந்து செலுத்தினர். இந்நிலையில், கடந்த 06.08.2021 அன்று ஆக்ஸிஸ் வங்கியில் பெறப்பட்ட கடனில் பாக்கி இருந்த ரூ.2.78 லட்சத்தை பணமாக செலுத்தி கடனை முழுவதுமாக சிவக்குமார் அடைத்து விட்டார்.



கடன் தொகை முழுவதுமாக முடிந்த பின்னரும், போலி ரசீது மற்றும் போலி கையெழுத்து மூலமாக சிவக்குமாரின் வங்கி கணக்கிலிருந்து ரூ.2.78 லட்சம் பணம் கையாடல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், தமது கணக்கில் இருந்து ஏடிஎம் மூலமும் ரூ.6 லட்சம் வரை பணம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிவக்குமார் புகார் தெரிவிக்கிறார்.

இது குறித்து சிவக்குமார் ஆக்ஸிஸ் வங்கி நிர்வாகத்திடம் கேட்டபோது, முறையாக பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், புகார்மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகர மத்திய குற்றப்பிரிவில் சிவக்குமார் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆனால், இதுவரை முதல் தகவல் அறிக்கை கூட பதியவில்லை எனவும், வங்கி நிர்வாகமும் முறையான பதில் அளிக்கவில்லை எனவும், இந்த பண மோசடி காரணமாக தனது மகளின் திருமணமம் நின்றுவிட்டதாகவும் குற்றம்சாட்டி இன்று குடும்பத்துடன் வங்கி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டார்.

இருப்பினும் வங்கி நிர்வாகம் எந்த ஒரு முறையான தகவலும் தெரிவிக்காத நிலையில், தமிழக முதல்வரின் புகார் பிரிவிற்கு மனு அனுப்ப இருப்பதாகவும், புதிதாக பொறுப்பேற்றுள்ள மாநகர காவல் ஆணையரை நேரில் சந்தித்த மீண்டும் இது குறித்து வலியுறுத்த இருப்பதாகவும் சிவக்குமார் தெரிவித்தார்.

ஓய்வுபெற்ற காவலரின் வங்கிக் கணக்கிலேயே பணம் கையாடல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...